திருமணத்துக்கு காத்திருக்கிறேன் : நடிகை பிரியங்கா சோப்ரா!!

335

www.runtamil.com2000வது ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் தமிழன் படத்தில் நடித்துள்ளார். 31 வயதாகும் பிரியங்கா சோப்ராவுக்கு ஐஸ்வர்யாராய் மாதிரி திருமண ஆசை வந்துவிட்டது.

தகுதியான மணமகனுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் தம்பி சித்தார்த் சோப்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்கிறது. அப்போது பிரியங்கா சோப்ரா தனது திருமணம் பற்றி கூறியதாவது..

எனது தம்பி கனிகா மாத்தூர் என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்தான். அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அது அவர்கள் முடிவு. அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நான் திருமணம் செய்வதற்கு எந்த நெருக்கடியும் இல்லை.

பெற்றோரோ குடும்பத்தினரோ எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. என்றாலும் எனக்கு தகுதியான மணமகன் கிடைக்கவில்லை. தகுதியான மணமகன் கிடைத்தால் திருமணத்துக்கு தயார். திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விடுவேன் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.