பெற்ற தாயை அம்மிக் கல்லால் அடித்து கொன்ற மகன் : அதிர்ச்சிக் காரணம்!!

596

இந்தியாவில் சொத்து தகராறில் தாயை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் பாக்கியம்மா (50). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பாக்கியம்மாவின் கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் பாக்கியம்மாவின் மூன்றாவது மகனான விஜய் (35) வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்துள்ளார். மேலும், பாக்கியம்மாவிடம் அடிக்கடி பணம் கேட்டதோடு சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அம்மாவிடம் விஜய் மீண்டும் சண்டை போட்டுள்ளார். அப்போது கோபமடைந்த விஜய் அருகிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து விஜயம்மாவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விஜயம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் விஜய்யை தேடி வருகிறார்கள்.