சிரியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்!!

606

 

சிரியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

ரஷ்யா போர் விமானமான SU-30SM இன்று காலை சிரியாவின் Khmeimim ராணுவ தளத்திலிருந்து புறப்பட்டது. இரு விமானிகளுடன் புறப்பட்ட SU-30SM, லடாகியா நகரத்துக்கு அருகே மத்திய தரைக்கடலில் விழுந்தது, இதில் இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை உறுதி செய்துள்ள ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை, பறவை மோதியதன் விளைவாக நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைசி நிமிடத்தில் கூட விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விமானிகள் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுகளில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகள், குண்டுகள் வீசி தாக்குதல் நடத்த இந்த விமானம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.