அநாகரீகமாக நடந்து கொண்ட ஷிகர் தவான்!!(வீடியோ)

373

dhanan-1அவுஸ்திரேலியாவை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் எதிரணி வீரர் ஒருவரை ஷிகர் தவான் கிண்டல் செய்துள்ளார்.

5 ஓவர்கள் பந்து வீசிவிட்டு ஷேன் வட்சன் காயம் காரணமாக மேலும் வீச முடியாமல் வெளியேறினார். பிறகு துடுப்பெடுத்தாடும் போது நம்பர் 8இல் களமிறங்கினார். அப்போது அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஷேன் வட்சனால் விந்தி விந்திதான் ஓட முடிந்தது. புதிய விதிகளின் படி பை-ரன்னர் கிடையாது. இந்த நிலையில் முதல் பந்தை பஞ்ச் செய்தார், தவான் அதனை பிடித்தார்.

அதோடு நில்லாமல் மிகவும் அநாகரிகமாக காயமடைந்து முடியாமல் விந்தி விந்தி சென்ற வட்சனை கேலி செய்வது போல் அதே போல் தானும் விந்தி விந்தி நடந்து செய்கை செய்தார்.

காயமடைந்த வீரரை கேலி செய்து அநாகரிகமான செயலாகும். இந்தியா பெற்ற அபார வெற்றியில் தவானின் நடத்தை ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.