வவுனியா பொது நூலகம் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பிடித்தது!!

708

Vavuniyaவவனியா நகர சபையின் கீழுள்ள பொது நூலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் நடாத்தப்பட்ட போட்டியிலேயே தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளது.

கடந்த வாரம் இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வின்போது இந்த விருது வழங்கப்பட்டது. வவுனியா பொது நூலகத்திலேயே இலங்கையில் முதன் முறையாக கண்பார்வையற்றோருக்கான நூலகம் அமைந்துள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.