காதலனுடன் ஓடிப்போன பெண்: இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

740

இந்தியாவில் இறுதிச்சடங்கு செய்த மகள் உயிரோடு திரும்பி வந்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நொய்டாவின் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சர்வேஷ் சக்சேனா, அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருபவருக்கு நீது என்ற மகள் இருக்கிறார்.

இவருக்கும், ராம் லக்ஷமண் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய பெற்றோருடனேயே நீது வாழ்ந்த நிலையில், கடந்த மாதம் 7ம் திகதி காணாமல் போயுள்ளார், இந்நிலையில் நீதுவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில், கடந்த 24ம் திகதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது தன்னுடைய மகள் தான் உறுதி செய்த நீதுவின் பெற்றோர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினர். இதனையடுத்து நீதுவின் கணவர் குடும்பத்தினரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர், அவருக்கு இறுதிச்சடங்கும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நீதுவின் கணவர் குடும்பம் மீதான சந்தேகம் உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் வேறு விதமாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது நீதுவின் அப்பா கடைக்கு அடிக்கடி வந்து சென்ற பூரன் என்பவர், சமீபகாலமாக கடைக்கு வராதது தெரியவந்தது.

இவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார், சில நாட்களில் வீட்டுக்கு திரும்பிய நீதுவும், அப்பா திட்டிகிட்டே இருந்ததால் பூரனோட சேர்ந்து வாழலாம்னு முடிவெடுத்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட சடலம் யாருடையது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.