16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி மது குடிக்கவைக்கப்பட்டு பலாத்காரம்!!

592

abuseஇந்தியாவின் மும்பையில் 16 வயது சிறுமி ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கட்டாயாப்படுத்தி மது குடிக்க வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் இரண்டு பேர் அந்த பெண்ணின் நண்பர்கள் ஆவர். மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரே இந்த கொடூரத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்னர் தாயும் இவர்களை விட்டுவிட்டு போய்விடவே சிறுமி தனது சகோதரனுடன் வசித்து வந்தார்.

இதனிடையே சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 20 வயதுக்கு உட்பட்ட 2 பேர் நண்பர்களாக அறிமுகமாகி இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சிறுமியை தொடர்புகொண்டு, தீபாவளி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அங்குள்ள மாடா பாலம் அருகே வருமாறு அவர்கள் கூறியதை கேட்டு, அங்கு சென்றார் சிறுமி. அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான 2 பேருடன் மேலும் இரண்டு பேர் சேர்ந்துகொண்டு கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள் நடைபெற்றுள்ளது. பலாத்கார சம்பவத்திற்கு பின்னர் அந்த 4 பேரும் உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்து தப்பித்து சிறுமி வீட்டிற்கு வந்துவிட்டார்.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து வீட்டில் தெரிவிக்காத சிறுமி, நேற்றுதான் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் சகோதரர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகளில் 2 பேர் மீது ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.