மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : சிக்கியது எப்படி?

556

சென்னையில் மனைவியை கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரவாயல் கங்கையம்மன் நகர் 6வது தெருவில் வசித்து வரும தம்பதியினர் சீனிவாசன்- இந்திராணி. இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. சீனிவாசன் பிளம்பராகவும், இந்திராணி அருகிலுள்ள கம்பெனியில் தையல் வேலையும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர இந்திராணி சடலமாக கிடந்துள்ளார், மாரடைப்பால் இறந்துவிட்டார் என சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆனால் இந்திராணியின் முகம், கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்த உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்தது.

எனவே மதுரவாயல் பொலிசிடம் புகார் செய்தனர், அத்துடன் இந்திராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் உண்மையை ஒப்புக்கொண்டார். மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : சிக்கியது எப்படி?வீட்டு வாடகை தருவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை வந்ததாகவும், குடிபோதையில் இருந்த சீனிவாசன் இந்திராணியை அடித்து உதைத்ததும் தெரியவந்தது.

கழுத்தை நெறித்ததில் இந்திராணி இறந்து விட்டதால், கொலையை மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது.