பெண் கேட்டுச் சென்ற காதலனை மோசமாக கொன்ற தந்தை : குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!!

552

தமிழகத்தில் பெண் கேட்டுச் சென்ற காதலனை, அந்த பெண்ணின் தந்தை அவரை தீ வைத்து எரித்ததால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையடுத்த புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். மும்பையில் உள்ள கடற்படை விமான தளத்தில் பணியாற்றி வரும் இவரும், திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகளான அஸ்வினியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த ராகேஷ் தன் உறவினர்களுடன், அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது அஸ்வினியின் தந்தையான செளந்தர் ராஜன் அவரை தீ வைத்து எரித்துள்ளார்.

இதனால் 70 சதவீத தீக்காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மும்பையிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். ராகேஷின் இறப்பை தாங்கமுடியாமல் அவரின் குடும்பத்தினர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.