வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

757

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (05.05.2018) மதியம் 2.45 மணியளவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையிலிருந்து பொலிஸார் தப்பியோடியுள்ளார். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்தின் மீது வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பொலிஸார் வைத்தியசாலையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பித்து சென்ற முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து ஊடகவியலாளர் சென்ற சமயத்தில் அவர்களை வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே இறக்கி விட்டு முச்சக்கரவண்டி சென்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் வேகமாக சென்ற சமயத்திலேயே பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்தினை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மதுபோதையில் சென்றால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொலிஸார். தங்களே விபத்துக்குகளுக்கு காரணமாகவிருந்தால் என்ன செய்வது?