தீ விபத்தில் முகத்தை இழந்த சிறுமி 12 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சி!!!

497

sirumiதீ விபத்தில் முகம் முழுவதுமாக கருகிய சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் தென் கிழக்கு பீஜியன் மாகாணம் புகு நகரத்தை சேர்ந்தவர் சூ ஜியாமி(17).

இந்த சிறுமிக்கு 5 வயதாக இருக்கும் போது விபத்தில் முகம் கருகி மிக கொடூரமாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய விரும்பினர், இதற்காக மருத்துவர்களை சென்று பார்த்தும் எந்த பலனும் இல்லாமல் போனது.

கருகிய முகத்துடன் வீட்டை விட்டு வெளியே போகாமல், முடங்கி கிடந்தார். இந்நிலையில் சீன மருத்துவர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தனர், இதனையடுத்து டாக்டர் ஜியாங் செங்ஹாங் தலைமையிலான குழுவினர்,சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமியின் முகத்தில் இப்போதுதான் சிரிப்பை பார்க்க முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.