கொட்டதெனியா பிரதேசத்தில் வெசாக் பார்க்க வராத காதலியின் வீட்டிற்கு காதலன் தீ வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மினுவங்கொட நீதிமன்ற நீதவான் ஷிலனி சத்துரன்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காதலி மீது கோபம் கொண்டு வீட்டிற்கு தீ வைத்து பாரிய நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 4 வருடங்களாக குறித்த பெண்ணை காதலித்துள்ளார். வெசாக் பார்ப்பதற்காக காதலியை அழைத்து செல்வதற்கு இளைஞன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும் வீட்டில் ஒருவரும் இல்லாமையினால் கோபமடைந்த இளைஞர் ஜன்னல் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து காதலிக்கு வழங்கிய ஆடைக்கு தீ வைத்துள்ளார். எனினும் தீ வீடு முழுவதும் பரவியமையினால் வீடு தீப்பற்றியுள்ளதுடன் வீட்டில் இருந்த பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த வீட்டில் ஏற்பட்ட சேதத்தினால் 6 லட்சத்து 28 ஆம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. நட்டஈட்டினை செலுத்த சந்தேகநபரின் தந்தை ஆயத்தமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.






