இரணைமடுக் குள, மூன்று இறால்களின் நிறை ஒரு கிலோ!

391

ralகிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தற்போது அதிகளவில் இறால் பிடிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட நன்னீர் மீன்பிடி விரிவாக்க அலுவலர் எஸ்.திலீபன் தெரிவித்தார். கிளிநொச்சி அரச செயலகத்தில் இடம்பெற்ற விவசாயக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு அவை வளர்ச்சியடைந்ததும் பிடிக்கப்பட்டு விற்பதால் அதிக இலாபத்தைப் பெறக் கூடியதாக உள்ளது.நாம் அடையாளப்படுத்தியுள்ள குளங்களில் கமக்கார அமைப்புக்களுடன் கிராம மக்களையும் இணைத்து மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பெரிய குளங்களில் நடப்பாண்டில் சுமார் 8இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இரணைமடுக் குளத்தில் 80 ஆயிரம் இறால் குஞ்சுகளும் விடப்பட்டன. தற்போது பிடிபடும் மூன்று இறால்கள் ஒரு கிலோ நிறை உள்ள நிலையில் இறால் ஒன்று 80ரூபா வீதம் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.