வவுனியாவில் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை : 69 கிலோ கேரள கஞ்சா மீட்பு!!

1264

 

இன்று (06.05) அதிகாலை வவுனியா ஓமந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எடுத்தவரப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கஞ்சா வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக பெருமளவு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேதபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில்,

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உதவியுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராச்சியின் கீழ் வன்னி மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொன்சேகா மற்றும் நிரோசன் (88567) ஆகியோரின் தகவலின் அடிப்படையில் சென்ற குழுவினர்,

வன்னி மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ்.அபேசேகர, பொலிஸ் பரிசோகதகர்களான ஜெயரத்தின(42912), நுவான்(55904), சமீர(14414), அசேல(77582), துசார(55868) ஆகியோரின் இந்நடவடிக்கையினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 69கிலோ 725கிராம் கேரளா கஞ்சாவினை மீட்கப்பட்டுள்ளதாகவும்,

அவ்வீட்டிலிருந்த வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த வயது 23 நபரையும், மல்லாவியைச் சேர்த்த 23வயது நபரையும், யாழ். தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 28 வயது நபரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.