இளவரசர் விராத் கோலி : இயன் சப்பல் புகழாரம்!!

313

Virathஇந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராத் கோலி நிச்சயம் நிரப்புவார் என இயன் சப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான விராத் கோலி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் மிரட்டுகிறார். சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம் எடுத்தார்.

இந்நிலையில் இவரால் சச்சினின் இடத்தை நிரப்ப முடியும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இயன் சப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் ஒய்வு பெறுவதாக எண்ணி அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர் என்றாலும் இளம் வீரராக திகழும் இந்திய அணியின் இளவரசரான விராத் கோலி அந்த இடத்தை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடித்த 2 சதங்களும், 1998ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் சச்சின் அடித்த 2 சதங்களை நினைவுப்படுத்துகின்றன.

சேசிங் செய்யும்போது அணியின் வெற்றியில் கோலிக்கு பெரும் பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சச்சினின் 49 சதங்கள் என்ற சாதனையை கோலி முறியடிப்பார் என சுனில் கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.