ரஹ்மான், இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம் : இசைத்தமிழராக பாடப் புத்தகத்தில் இணைப்பு!!

340

 

இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரை கௌரவிக்கும் வகையில், அவர்களது சாதனைகள் பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள பாடசாலைகளுக்கான 11ம் தரத்திற்கான (ப்ளஸ் வன்) வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரது சாதனைகள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் ஒன்று முதல் 12 (ப்ளஸ் டூ) வரையிலான வகுப்புகளின் புதிய பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார்.

தரம் 1,6,9 மற்றும் 11ம் (ப்ளஸ் வன்) தரங்களுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின.

இந்நிலையில், தரம் 11க்கான (ப்ளஸ் வன்) பொது தமிழ் பாட நூலில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் ‘சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் ‘ஒஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.