ஸ்ரேயா ஓய்வு எடுக்க வேண்டும் : காஜல் அகர்வால்!!

296

Kajal Agarwal New Cute Pics in Mr Perfect Movieதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரேயா நடித்துள்ளார். 2001ல் இருந்து நடித்து வருகிறார். ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். கடைசியாக தமிழில் ரெளத்திரம் படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். 2011ல் இப்படம் வந்தது. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

சமீபத்தில் கன்னடத்தில் நடித்த சந்திரா படத்தை தமிழிலும் வெளியிட்டனர். ஸ்ரேயா மார்க்கெட் வெகுவாக சரிந்து விட்டது. இளம் கதாநாயகிகள் வரத்தால் ஸ்ரேயாவுக்கு படவாய்ப்புகள் வரவில்லை. ஸ்ரேயாவுக்கு 31 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வாலிடம் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்த நடிகை ஒருவர் இப்போது ஓய்வு பெறவேண்டும் என்றால் எந்த நடிகையை சொல்வீர்கள் என்று நிகழ்ச்சியொன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு ஸ்ரேயா என்று காஜல் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிட்டினால் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்றார். ஸ்ரேயா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.