இஸ்லாத்தை இழித்துப் பேசிய பாடாசாலை மாணவன் : இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல்!!

687

fightடாக்கா, பங்களாதேஷில் எதிர்க்கட்சி தொண்டர்கள், இந்துக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தில் உள்ளது போனோ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ரஜிப் சாகா என்ற பள்ளி மாணவன், இஸ்லாம் மதத்தை இழித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, எதிர்க் கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி, ஜமாத்இஇஸ்லாமி ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் 26 வீடுகளை தாக்கி சூறையாடினர்.

அங்கிருந்த ஏராளமான சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கிருந்த 150 இந்து குடும்பங்கள் வேறிடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, உயர்நீதிமன்றம், தானாகவே இந்த வழக்கை எடுத்து விசாரித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட விஷமிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யும் படியும் இச்சம்பவம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படியும், மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.