உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் நடக்கும் அதிசயம்!!

611

உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே இந்த ஸ்டெம் செல்களின் முக்கியத்துவத்தையும் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

நமக்கு வயது ஆக ஆக நமது குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் பல காரணிகளால் காலப்போக்கில் திறம்பட செயல்பட தவறிவிடுகிறன, இதனால் நாம் எளிதில் நோய்வாய்ப்படுகிறோம்.



ஆனால் நாம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி பல்கலைக்கழக உயிரியல் ஆராய்சியாளர்களான ஓமர் இல்மாஸ் மற்றும் டேவிட் சபாடினி ஆகிய இருவரும் எலிகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.

அப்போது இரண்டு வகையாக எலிகளை பிரித்து ஆராய்ச்சி செய்ததில் உண்ணாவிரதம் இல்லாத எலிகலின் உடலில் இருந்த ஸ்டெம்செல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் உண்ணாவிரதம் இருக்கவைக்கப்பட்ட எலிகளின் உடலில் இருக்கும் செல்களில் குளுக்கோஸ் உருவாவதற்கு பதிலாக கொழுப்பு அமிலங்கள் கரைந்து ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலில் காயம் அல்லது நோய் தொற்று ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்ய ஸ்டெம் செல்கள் உதவுகின்றன.

நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை பெருவதால் அவர்களது குடல் செல்கள் பாதிக்கப்படும். எனவே அவை மீண்டும் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம்.

எனவே உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருவதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இதனால் அதிக வாய்ப்புள்ளது.