அறையில் மர்மமாக இறந்து கிடந்த இளைஞர் : உடனிருந்த இளம்பெண் தேடும் பொலிசார்!!

611

திருப்பதியில் உள்ள ஹொட்டல் அறையில் இளைஞரை கொலைசெய்துவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த மோகன் என்ற நபரும், திவ்யா என்ற பெண்ணும் திருப்பதி கோயிலுக்கு எதிரே உள்ள ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

6 திகதி மாலை ஹொட்டலில் தங்கியவர்கள் 7 ஆம் திகதி மாலை அறையை காலி செய்து சென்றுள்ளார்கள். பின்னர் மீண்டும் அன்றிரவே வந்து ஹொட்டல் அறையில் தங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், அடுத்த நாள் மதியம், அறையை விட்டு வெளியே வந்த பெண், எனது கணவர் பிறகு வருவார் என ஹொட்டல் ஊழியர்களிடம் கூறிச் சென்றுள்ளார்.

இப்பெண் சென்ற பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, இளைஞர் இறந்துகிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் ஒரு சில ஆதாரங்கள் கிடைத்தன. இவர்கள் உண்மையிலேயே கணவன் மனைவியா? அல்லது கள்ளத் தொடர்ப்பு வைத்து இங்கு வந்தார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை செய்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.