அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் கோமாவில் இருந்து அவன் நலமாகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரெண்டன் மக்ன்லி (13) என்ற சிறுவனுக்கு சமீபத்தில் நடந்த விபத்தில் தலையில் பயங்கரமாக அடிப்பட்ட நிலையில் மூளை பாதிக்கப்பட்டது. ட்ரெண்டனுக்கு 3 முறை தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அவனுக்கு உடல்நலம் சரியாக வில்லை.
இதையடுத்து ட்ரெண்டன் கோமா நிலைக்கு சென்ற நிலையில் அவன் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் சிறுவனின் பெற்றோர் அவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில் ட்ரெண்டன் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் அவனுக்கு நினைவு திரும்பியது. தற்போது அவன் உடல்நலம் தேறிவருகிறான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






