பேலியகொட, வனவாசல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் வண்டி ஒன்று ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் வண் மோதி இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின்போது மோட்டார் வண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ரத்கம, வெல்லபட பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நபர் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு ரயில் கடவையில் வாகனத்தை செலுத்திச் சென்றநிலையில் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த36 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது.





