இலங்கை பயனர்கள் குறித்து வைபர் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

552

இலங்கைப் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வைபர் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இதன்படி, தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பல்வேறு தகவல் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் எட்டு மில்லியன் பயனர்கள் வைபர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வைபர் மிகவும் பாதுகாப்பான ஓர் தொடர்பாடல் முறைமை என தெரிவிக்கப்படுகின்றது.