காதலியின் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

1192

தமிழகத்தில் எரித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் உயிருக்கு போராடிய நிலையில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையடுத்த புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் செளந்தர் ராஜன். மும்பையில் உள்ள கடற்படை விமான தளத்தில் பணியாற்றி வரும் இவரும், திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகளான அஸ்வினியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த ராகேஷ் தன் உறவினர்களுடன், அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது அஸ்வினியின் தந்தையான செளந்தர் ராஜன் அவரை தீ வைத்து எரித்து கொன்றுவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சவுந்தரராஜன் தரப்பில் ராகேஷ் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.இதையடுத்து அந்த இளைஞன் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், நான் சேர்மேன் பெண்ணை காதலித்தேன், அவர்கள் வீட்டிற்கு பெண் கேட்டுச் சென்ற போது பெட்ரோல் ஊற்றிக் கொள்ளச் சொன்னார்கள், இதனால் பேஸ்புக் மற்றும் எனது நண்பர்கள் எனக்கு ஆதரவு வேண்டும் என்று கூறியுள்ளார்.

70 சதவீத தீக்காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக மும்பையிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது