வவுனியா கூமாங்குளத்தில் ஏமாற்றத்துடன் திரும்பிய கடற்படையினர் : கிடைத்து என்ன?

549

 

வவுனியாவில் நேற்று மாலை கூமாங்குளம் கோவில் வீதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வன்னி கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் அகழ்வுப்பணியினை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு நேற்று மாலை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகள் இரவு நிறுத்தப்பட்டு இன்று (09.05) காலை திரும்பவும் 8மணியளவில் தோண்டப்பட்டது.

எனினும் அப்பகுதியில் வெடி பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை இதையடுத்து 9.30 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு தோண்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு வவுனியாவில் பல பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் வெடி பொருட்களைத் தேடி மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணிகளில் கணிசமானளவு பகுதிகளில் வெடி பொருட்கள் எவையும் படையினரால் மீட்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.