இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம்!!

595

 

இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் அலுவலக அறையிலேயே தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தீ அணைப்பு ஊழியர்கள் தீயை அணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காற்று சீரமைப்பு ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.