பொதுநலவாய மாநாட்டிற்கு கமரூன் செல்லக்கூடாது என வலியுறுத்தி பரமேஸ்வரன் உண்ணாவிரதம்!!

698

Parameswaranஇலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது என்னும் கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதி முன்பாக அவர் தனது உண்ணாவிரதத்தை நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்துள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உக்கிரமடைந்த வேளை லண்டனில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.