கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் இராணுவ அதிகாரிகள் இருவர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் லான்ஸ் கோப்ரல் ஒருவரும் இராணுவ அதிகாரி ஒருவரும் மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்திலிருந்து குருநாகல் இராணுவத் தலைமையகத்திற்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.




