வவுனியா விக்ஸ்காட்டு காணிப் பிரச்சனைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளி!!

452

வவுனியாவில் சர்ச்சைக்குரிய பாரதிபுரம் விக்ஸ்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சனைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிற்கு இஸ்லாமியர்கள் உரிமை கோரி வந்து அக்காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வேளைகளில் குறித்த பகுதியில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்பை காட்டி தடுத்து வந்தனர்.

கடந்த (08.05) அன்று இஸ்லாமியர்கள் மீண்டும் குறித்த காணியை கைப்பற்றும் நோக்கில் JCB கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்ட பொழுது அப்பகுதி வாழ் தமிழர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இன்று (10.05) வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினர் அதிரடியாக களமிறங்கி குறித்த காணியில் இக்காணி தமிழ் தெற்கு பிரதேச சபைக்கு உரித்தான காணி என்று பதாதையை இட்டுள்ளனர்.

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) தலமையில் உபதவிசாளர் மகேந்திரன் ஆகியோருடன் கட்சி வேறுபாடின்றி ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்ததுடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பதாதையை இட்டுள்ளனர்.