எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தவறான செய்தி பரப்பப்பட்டது : வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர்!!

367

chettikulamகடந்த சில தினங்களுக்கு முன்னர் “வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் கல்வி அமைச்சின் கட்டளைளையை மீறி செயல்படுகின்றதா” என்ற தலைப்புடன் பல ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி தொடர்பாக வவுனியா நெற் இணையம் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் பல விடயங்களை தெளிவுபடுத்தினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் மணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சையொன்று காலை 8 மணியில் இருந்து 10.30 மணிவரை இடம்பெற்றது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஆசிரியர்களின் விருப்பத்துடனேயே பரீட்சையினை விடுமுறை தினத்தில் நடாத்தினோம். எனினும் 10.30 மணிக்கு பின்னர் மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் நன்மை கருதி எதிர்வரும் தவணைப் பரீட்சைக்காக அல்லது அரசால் நடத்தப்படும் சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சையை நடத்த திட்டமிட்டபடியே பாடசாலையில் பரீட்சை இடம்பெற்றிருந்தது.

அரசால் விடுமுறை தினமாக திடீரென கிடைத்த அறிவித்தலால் அவ்விடுமுறை தொடர்பில் எம்மால் அதனை ஏற்கவோ அல்லது திங்கட்கிழமை எமது பாடசாலை நிகழ்வொன்று திட்டமிட்டுள்ள நிலையில் அதனை தவிர்த்து வேறு நாளில் நடத்த முடியாதுள்ளமையாலும் ஆசிரியர்களின் விருப்பத்திற்கு இணங்க வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் வீடு செல்ல அயலில் உள்ள ஆசிரியர்களின் உதவியுடன் இப் பரீட்சையை நடத்தி முடிக்கப்பட்டது. இது பாடசாலை நாளாக கருத்தப்படாது என ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டதன் பெயரில் இப்பரீட்சையை நாம் நடத்தினோம்.

அனால் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலரால் இவ்வாறான தவறான செய்தி பரப்பப்பட்டது வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக நாம் பிரதேசவாதிகளுடனும் பாடசாலை பழையமாணவர் சங்க பிரதிநிதிகளுடனும் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் அனைவரும் அதிபருக்கு சார்பாக கருத்து தெரிவித்ததுடன் அவரது சேவையையும் வெகுவாக பாராட்டினர்.

பழையமாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்.. கடந்த ஓர் ஆண்டில் இப் பாடசாலை அதிபரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. பாடசாலையின் முன்னேற்றத்திற்கு இவர் பாடுபடுவதை பிரதேசவாசிகள் அனைவரும் நன்கு அறிவர்.

இவ்வாறான தவறான செய்திகளை பரப்பி இவரை இடமாற்றத்திற்கு தூண்டுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறும்பட்சத்தில் அவருக்கு ஆதரவாக பிரதேச இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டம் நடாத்தவும் தயாராகவுள்ளனர் என்று தெரிவித்தார்.