195 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டு பிரஜை கைது!!

705

arrest1ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரது பயணப்பையை சோதனையிட்ட போது 15 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஹெரோயின் தொகையின் பெறுமதி 195 மில்லியன் ரூபா என சுங்க ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இந்நபர் கடந்த 26ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.