ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வெட்டிக் கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது!!

559

MURDERஅநுராதபுரம் – விகாரகல்மில்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் ஹசலக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை மூன்று பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், தாயின் சகோதரி, அவரது மகன் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களது உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெட்டுக்காயங்களுக்கு உள்ளான கே.ஏ.பியதாஸ என்பவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.