மீண்டும் அணிக்கு திரும்புவேன் : ஸ்ரீசாந்த் நம்பிக்கை!!

474

Sreeshanthவாழ்நாள் தடையில் இருந்து மீண்டு, மறுபடியும் போட்டிகளில் பங்கேற்பேன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் வாழ்நாள் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது டுவிட்டரில் ஸ்ரீசாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கடவுள் எப்போதும் கடினமான போராளிக்கு மட்டும் தான் கடினமான தருணத்தை தருவார். விரைவில் அதற்கான விடையும் கொடுப்பார்.

எனது நிலை விரைவில் மாறும் என நம்புகிறேன் என் மீது எந்த தவறும் இல்லை என்பது விரைவில் தெரியவரும். மோசமான நேரத்தால் தான் இப்படி மாட்டிக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.