இலங்கை இளைஞருக்கு திருமண முயற்சி : ஐரோப்பாவில் தற்கொலைக்கு முயன்ற சிறுமி!!

529

ஐரோப்பிய நாடான இத்தாலியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமி ஒருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இத்தாலியின் Lecce பகுதியில் வாழும் 14 இலங்கை சிறுமி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இளைஞன் ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க தந்தை விரும்பம் கொண்ட காரணத்தால் இந்த முயற்சியை எடுத்துள்ளார். சிறுமிக்கு பத்து வயது முதல் குறித்த இளைஞனை திருமணம் செய்து வைப்பதாக தந்தை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கட்டாயத்தில் பெயரில் தனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற அச்சம் காரணமாக, சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தனது தந்தை தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு கட்டாயப்படுத்துவார் என்ற அச்சத்திலும், தனது கையடக்க தொலைபேசியை தந்தை பறித்து விட்டார் என்ற காரணத்தினாலும் சிறுமி கோபம் கொண்டுள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் தனது கையின் மணிக்கட்டு பகுதியை தான் வெட்டியதாக சிறுமி தனது ஆசிரியரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் சமூக சேவை காப்பகம் ஒன்றில் தான் இருந்ததாகவும், அங்கு தான் தினமும் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேச எண்ணியதாகும் குறிப்பிட்டுள்ளார்.

சக ஆண் நண்பர்களிடம் தான் பேசி விடுவேன் என்ற காரணத்தில் தனது கையடக்க தொலைபேசியை தந்தை பறித்தாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.