செல்ஃபி மோகம் : எஸ்கலேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 10 மாதக் குழந்தை!!

505

 

இந்தியாவில் வணிக வளாகம் ஒன்றில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த தாயாரின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை எஸ்கலேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வணிக வளாகத்தில் தங்களது 10 மாத குழந்தையுடன் கணவன் மனைவி இருவர் சென்றுள்ளனர். இந்த நிலையில் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருக்கும் போது மனைவியிடம் செல்ஃபிக்கு போஸ் தர கேட்டுள்ளார் கணவன்.

இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இதனிடையே நிலைத்தடுமாறிய குறித்த பெண்ணின் கைகளில் இருந்த 10 மாத குழந்தையானது தவறி கீழே விழுந்துள்ளது.

அதில் பாதுகாப்பு கம்பியில் மோதி குழந்தையானது சுவருக்கும் எஸ்கலேட்டருக்கும் இடைவெளியில் சிக்கி பின்னர் தரையில் மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்ற பார்வையாளர்கள் விரைந்து சென்று குழந்தையை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்து குழந்தையை மீட்டு பொதுமக்களும் குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் குழந்தை தரையில் விழுந்த உடனையே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.