மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் : பயத்தில் செய்த அதிர்ச்சி செயல்!!

668

தமிழ்நாட்டின் சென்னையில் உறவுக்கு மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கத்தை சேர்ந்தவர் டேனியல் (48). இவர் மனைவி அம்மு (45). தம்பதிக்கு தர்மதுரை (20) என்ற மகன் உள்ளார். அம்முக்கு சிறுநீரகத்தில் கட்டி இருந்த நிலையில் இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை இருந்து வந்தது.

இந்நிலையில் தர்மதுரை நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்ட நிலையில் டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது மனைவியை உறவுக்கு டேனியல் அழைத்ததாகவும் அதற்கு அம்மு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டேனியல் வீட்டிலிருந்த கத்தியால் அம்முவின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பின்னர் பொலிசுக்கு இது தெரிந்தால் தன்னை கைது செய்துவிடுவார்களோ என பயந்த டேனியல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து மாலை தர்மதுரை வீடு திரும்பிய நிலையில் தனது பெற்றோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரு சடலங்களையும் கைப்பற்றி விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.