நான் எதற்காக சாக வேண்டும் : நடிகை ஸ்வேதாவை சீண்டிய எம்.பி ஆவேசம்!!

316

Swetha-Menonநான் எதற்கு தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும் என்று ஆவேசமடைந்துள்ளார் எம்.பி குருப்பு.

நடிகை ஸ்வேதா மேனன் கொல்லத்தில் நடந்த படகுப் போட்டிக்கு வந்தபோது அவருடைய கை தோளை உரசியதாகவும், வேண்டும் என்றே அருகே போய் ஒட்டியபடி நின்றதாகவும் 73 வயதான குருப்பு மீது புகார் கிளம்பியது.

ஸ்வேதா மேனனும் இதுதொடர்பாக பொலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகாரானது தனக்கு எதிரான சதி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக கூறி புகாரைத் திரும்பப் பெற்றார் ஸ்வேதா. இந்நிலையில் ஸ்வேதா கொடுத்த புகாரால் அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு குருப்பு முயன்றதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து குருப்பு கூறுகையில் கொல்லம் அஷ்டமுடி காயலில் நடந்த படகு போட்டிக்கு நடிகர் கலாபவன் மணி, ஸ்வேதா மேனன் ஆகியோரை அழைக்க வேண்டும் என்று சிலர் விருப்பப்பட்டனர்.

எனவே ஸ்வேதா மேனன் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். ஏராளமான மக்கள் முன்னிலையில் விழா நடந்தபோது அவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இந்த புகாருக்கு பின்னணியில் கூட்டுச்சதி இருக்கிறதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் அப்படி ஒன்றும் மோசமானவன் இல்லை என்றும் நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை தற்கொலை செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் எம்.பி. பதவியில் இருந்து மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கிறது. நான் சினிமா பார்ப்பதும் இல்லை, ஸ்வேதாமேனன் பற்றியும் எனக்கு தெரியாது.

ஸ்வேதா மேனன் என் மீது கூறிய புகாருக்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அந்த மேடையில் வேறு யாராவது அவருக்கு தொல்லை கொடுத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மட்டுமே கூறி இருந்தேன் என்று கூறியுள்ளார்.