தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கதி!!

810

பசறை – தெமவெலகம பிரதேசத்தில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான மாணவி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதவெலகம பாடசாலையில் 5ஆம் தரத்தில் பயின்று வந்த ரஸ்மிதா ரஸ்மீதாரா என்ற மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாணவி புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வகுப்புக்கு சென்று தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நேற்று மாலை 3 மணியளவில் அவர்கள் சென்றுக்கொண்டிருந்த குறுக்கு பாதையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

தாயும் மகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பிரதேசவாசிகள் தாயை மீட்ட போதிலும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.