குடும்பப் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா!!

634

Nithiyanandaகுடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை மிக விரைவில் சுலபமாக தீர்த்து வைத்து விடுகிறார் நித்யானந்தா. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை இரவில் சுவாமி நித்தியானந்தா நித்ய தர்மம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

தொலைக்காட்சிகளில் அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்த நித்தியானந்தா இப்போது தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு சொல்கிறார்.

சமீபத்தில் கணவன் மனைவி பிரச்சினை பஞ்சாயத்திற்கு வந்தது. தன்னையும் குழந்தைகளையும் விட்டு தோழியோடு போய்விட்டார் தன் கணவர் என்று ஒரு பெண் புகாரோடு வந்துள்ளார்.

புகாருக்கு ஆளான பெண்ணும் நிகழ்ச்சியில் பேசினார். தான் வெறும் தோழி மட்டும்தான். பணம் கொடுத்து உதவி செய்யத்தான் வந்தேன் என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தே இருவரும் கண்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.

பெண்களின் சண்டையை பார்த்து கொஞ்சநேரம் அமைதி காத்த நித்தியானந்தா அந்த பெண்ணின் கணவரை கூப்பிட்டார். ஒருபக்கம் தோழி, ஒருபக்கம் மனைவி யார் பக்கம் உட்கார விரும்புகிறீர்கள், யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று நித்தியானந்தா கேட்க சற்றும் தயங்காமல் தோழியின் அருகில் அமர்ந்தார் கணவர்.

என் உயிருக்கு உத்தரவாதமில்லை எனவேதான் தோழியுடன் வாழ விரும்புகிறேன் என்று கணவர் கூறவே இருவரிடம் உத்தரவாதம் வாங்கித் தருகிறார் நித்தியானந்தா. உடனே தோழியை விட்டு மனைவியின் பக்கம் இடம் மாறிக் கொண்டார் அந்த ஆண்.

இதனைத் தொடர்ந்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்று கூறி தோழி ஒதுங்கிக் கொண்டார். ஒருவழியாக ஆறுமாதமாக இருந்த குடும்ப பஞ்சாயத்தை அரைமணி நேரத்தில் பேசி தீர்வு சொன்னார் நித்தியானந்தா. அழகான தமிழ் உச்சரிப்பில் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார் நித்யானந்தா.