முகநூல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!

541

மிடியாகொட பிரதேசத்தில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 இற்கும் அதிகமானோர் முகநூல் மூலமாக இணைந்துள்ளனர். இதன் பின்னர் ஒரு கொட்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இணைந்துள்ளனர்.

இந்த நள்ளிரவு கொண்டாட்டத்தில் 150 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடத்தில் கஞ்சா, போதை ஊட்டும் டொபி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சுற்றிவளைப்புக்கு 75 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இவர்களில் 7 பேரிடம் போதைப் பொருட்கள் இருந்துள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் யுவதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.