கார்த்தியின் அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு!!

822

All-in-All-Azhagu-Rajaகார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய அழகுராஜா படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 2.44 மணி நேரம் ஓடும் இந்த படம் முழுநீள நகைச்சுவை படம் எனகூறி வெளிவந்திருந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படம் மிகவும் நீளமாக இருப்பதாக ரசிகர்களிடையே பரவலாக கருத்து எழுந்தது. இதையடுத்து, இப்படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக 25 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளதாக இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதில், ஒரு பாடல் காட்சியும், சில வசனங்களும் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு காட்சிகளை நீக்கிய அழகுராஜா கடந்த ஞாயிறு மாலை முதல் டிஜிட்டல் வசதிகள் கொண்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்னும் பல திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இந்த காட்சிகளை நீக்கிய படம் வெளியிடப்பட்டுள்ளது