ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

477


இந்தொனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை காண நேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குறித்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். உலகின் மிகவும் நீளமானதும் மிகவும் எடை கூடியதுமான அந்த மலைப்பாம்புடன் அந்த இரு சிறுமிகளும் கொஞ்சி விளையாடுகின்றனர். விஷத்தன்மையற்ற அந்த மலைப்பாம்பானது மனிதர்களை கொன்று முழுவனாக விழுங்கும் திறன் படைத்ததாகும்.குறித்த ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் அந்த மலைப்பாம்பின் மீதேறி சிறுமி விளையாடுகிறார். இன்னொரு சிறுமி அதன் மீது அமர்ந்தவாறே கமெராவுக்கு முகம் காட்டுகிறார். குறித்த காட்சிகளை கண்ட மக்கள், சிறுமிகளின் பெற்றோரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.இன்று அல்லது நாளை ஒரு நாள், அந்த மலைப்பாம்பு சிறுவர்களை தின்றுவிடப்போகிறது. இதற்கு காரணமான பெற்றோரையே குற்றஞ்சாட்ட முடியும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.


இது மிகவும் ஆபத்தானது, பெற்றோர்கள் கண்டிப்பாக கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் என பெண் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.