கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம் : சிக்கலில் பெற்றோர்!!

611

கொழும்பில் உயிரிழந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் மரணமடைந்த ஆண் குழந்தையொன்றை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அடக்கம் செய்ய பெற்றோர் முயன்றுள்ளனர். இதன் காரணமாக மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தையின் இறுதி சடங்கு நேற்று நடத்தப்படவிருந்தது.

இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தமையினால் குறித்த குழந்தை உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மரணமடைந்த குழந்தையின் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி , நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்ததன் பின்னர், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.