யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு எற்பட்டுள்ள நிலை!!

701

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விபத்துக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இருபாலை பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பயணித்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த இரு பெண்களும் மது போதையில் இருந்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்களில் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விபத்துக்குள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போதிலும் அவர்கள் மது போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.