இலங்கையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற பயங்கரம்!!

522

மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவரொருவர் அதே வகுப்பை சேர்ந்த மற்றுமொரு மாணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குறித்த மாணவர் சியம்பலாண்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான மாணவர் சில மாணவர்களுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட மாணவரை கேளி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சினம் கொண்ட குறித்த மாணவர் இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்து வீடு நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், கத்திக்குத்துக்கு இலக்கான மாணவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுதாக தெரிவிக்கப்படுகிறது