கோமா நிலையில் நடிகர் சிட்டிபாபு!!

311

City_Babuகவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.

இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக பைபாஸ் சத்திர சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை. பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீர் என்று மயங்கி விழுந்த இவரை கவலைக்கிடமான நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிட்டிபாபுவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சுய நினைவை இழந்து கோமா நிலைமைக்கு சென்றுள்ளார் என்றும் அவரின் மூளையில் கட்டி இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.