நடிகர் ரஜினிகாந்த், தனது மன்றத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் 78 வயது ரசிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தா (78). தீவிர ரஜினி ரசிகையான இவர், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்ததும், ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கைப் பணியில் தீவிரமாக இறங்கினார் சாந்தா.
இவரது ஒரே ஆவல் என்னவென்றால், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைக் கூற வேண்டும் என்பது தான். இதுகுறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாந்தாவை தன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.






