வவுனியா நெடுங்கேணி நயினாமடுவில் பாரிய மரம் முறிந்து விழுந்தில் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு செல்வதற்கான வீதி தடைப்பட்டதுடன் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடும் காற்றுடன் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக இன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி நயினாமடு பிரதான வீதிக்கு அருகில் இருந்த பாரிய மரம் வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்ததன் காரணமாக இவ் வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டது.
இதனால் வவுனியா முல்லைத்தீவு போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் உடனடியாக விரைந்து செயல்ப்பட்ட கிராமத்து இளைஞர்கள் வீதியின் குறுக்காக விழுந்து கிடந்த மரத்தை துரிதகதியில் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்திருந்தனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற மக்கள் அப்பாதை தடைப்பட்டதன் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.







