வெள்ளவத்தையில் ரயில் மிதி பலகையில் சென்ற நபர் எதிர் திசையில் வந்த ரயிலில் மோதி பலி!!

1064

trainவெள்ளவத்தை ரொக்ஷி மாடி வீட்டுத் திட்ட பகுதிக்கு முன்னால் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 07.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் மிதி பலகையில் பயணித்த நபர் கோட்டையில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி வீசி எறியப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விஜேரத்ன நதுகே ரமேஷ் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.