நடிகர் விஜய் தற்போது தன்னுடைய அடுத்த படமான தளபதி 62ல் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
பிரமாண்டமான பொருட்செலவில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாதி படப்பிடிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான மின்சார கண்ணா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அந்த படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த மாஸ்டர் மகேந்திரன். இது குறித்து அவர் கூறியதாவது,
மின்சார கண்ணா படத்தில் ஒரு சமையலறையில் ஒரு சண்டைக்காட்சி வரும். அந்த சண்டையில் நான் விஜய் சார் மீது முட்டையை வீசி அடிப்பேன். அந்த காட்சி, படப்பிடிப்பு முடிந்ததும் “நீ வேணும்னே தான என் மேல முட்டையை வீசுன..? என்று ஜாலியாக கேட்டார். அந்த படத்தில் நடித்த அனுபவம் இப்போதும் மறக்கமடியாத ஒன்றாக உள்ளது என்கிறார் மகேந்திரன்.






